மௌனமான நேரம்

 

Tuesday, 18 August 2009

இயற்கைக்கு எதிராக செயற்கையின் சா(சோ)தனை!!

Posted by மௌனமான நேரம் | Tuesday, 18 August 2009 | Category: |
டுனிசியா நாட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள் உருவாகியுள்ளன.


செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் அவர் 12 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதில், 6 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒரே பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறக்கவுள்ள மகிழ்ச்சியில் அந்தத் தம்பதியினர் உள்ளனர். எனினும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் செயல் பொறுப்பற்றதாக உள்ளது என்று ஏனைய செயற்கைக் கருவூட்டல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண்ணிற்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுளளனர்.


இதே கருத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சைமன் பிஃஷர் கூறியுள்ளார்.


தனது மனைவி சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வார் என்று அவரது கணவர் கூறியுள்ளார். எனினும், இது சாத்தியமில்லாதது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


12 குழந்தைகளையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரசவிக்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர் அந்த பொறுப்பற்ற(?) டாக்டர்கள்.


இது குறித்து பிரசவ நிபுணர் டாக்டர் மேன்னி ஆல்வரெஸ் கூறுகையில்,கருவில் பல குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே. பொதுவாக ஒரு கருவில் ஐந்து குழந்தைகளுக்கு மேல் இருப்பது மிகவும் ஆபத்தானது. கருவில் இருக்கும் குழந்தைகளை பெரும்பான்மையானவற்றை அவர் பெற்றெடுத்தாலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி விடும்.சில காலத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இவரை போன்ற பெண்மணிகளுக்கு குறைபிரசவம் உண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்றார்.


இது இயற்கைக்கு எதிராக செயற்கையின் சா(சோ)தனையாக இருக்குமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்..


ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.