மௌனமான நேரம்

 

Friday, 21 August 2009

சோனியா விரக்தி

Posted by மௌனமான நேரம் | Friday, 21 August 2009 | Category: |
சோனியா அகர்வால் விரக்தி:

கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்று சோனியா அகர்வால் விரக்தியுடன் கூறினார்.

தமிழ் திரையுலகத்திற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.

செல்வராகவனுடன் நடந்த திருமண பந்தம் பாதியிலேயே முடிந்து விவாகரத்து வரை சென்றிருப்பது குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், நான் இப்போது முன்பை விட மன அமைதியாக இருக்கிறேன். என் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை.


எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்னைகள் இருக்கும். என் வாழ்க்கையிலும் பிரச்னைகள் வந்தன. பிரச்னைகளை பேசித் தீர்க்க முயன்றேன். அடுத்தடுத்து என்னுடைய முயற்சி தோல்வியில் முடிந்ததால் இப்படியொரு முடிவை இருவரும் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.

நான் செல்வாவை திருமணம் செய்த‌போது என் வயது 24. எங்கள் திருமணத்துக்கு முதலில் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவர்களுடன் போராடி சம்மதம் பெற்றேன். பாதியிலேயே திருமண வாழ்க்கை முறிகிறது. இந்த கல்யாணத்தை பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்றார்.

தீவிர உடற்பயிற்சி:

நடிகை சோனியா அகர்வால் தற்போது தீவிர உடற்பயிற்சியில் குதித்திருக்கிறார். மீண்டும் முழு வீச்சில் நடிக்கப் போவதாக சொல்லும் அவர், சினிமா வாய்ப்பு கேட்டு தனது திரையுலக நண்பர்களை தொடர்பு கொண்டு வருகிறாராம்.

தற்கொலை முயற்சி:

இதற்கிடையில் சோனியா அகர்வால் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி பரவியது. இதுபற்றி சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார்.


நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும். அது சிலரால் பரப்பப்பட்ட கற்பனையான காமெடி. என்னை பொறுத்தவரை நான் திடமான மனது கொண்டவள். என் வாழ்க்கையில் அதிகமான மன அழுத்தங்கள் ஏற்பட்டபோது கூட கலங்காமல் தான் இருந்து இருக்கிறேன்.


என் மனம் அமைதியாகவும், சிந்தனை தெளிவாகவும் இருக்கிறது. இந்த நிலையில் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட என்ன அவசியம் இருக்கிறது. என்னை பற்றிய விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. எல்லோரது வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அவரவர் தனது சொந்த முயற்சியின் மூலம் தீர்வுகண்டு தீர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது மனம் புண்பட்டு உள்ளது. அதை ஆற்றுவதற்கு தனிமை தேவை. மீண்டும் திடமான பெண்ணாக திரும்பி வருவேன். நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவேன்.

கோர்ட்டு உத்தரவு :

கோர்ட்டு உத்தரவுபடி செல்வராகவன், சோனியா அகர்வால் இருவருக்கும் 6 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து திருமண முடிவு சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இருவரும் சேர்ந்து விவாகரத்து கேட்டுள்ளதால் பிப்ரவரி மாதம் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டு விடும்.

எனவே செல்வ ராகவன்- சோனியா அகர்வாலின் 3 1/2 ஆண்டு திருமணம் வாழ்க்கை பிப்ரவரி மாதம் முடியப்போகிறது.

சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவும் அவரது மனைவியும் இப்படி சேர்ந்து வந்து மனு செய்து சுமூகமாக விவாகரத்து பெற்று சென்றனர். அதே வழியை தற்போது செல்வராகவன்- சோனியா அகர்வால் ஜோடி பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.