Tuesday, 11 August 2009
அவசர அவசரமா பாலிசி மாற்றம் செய்யும் சாப்ட்வேர் நிறுவனங்கள்!!
உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும், மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் இருந்தாலும், இன்னும் நிலைமை சரியாக வில்லை என்பதுதான் உண்மை. இப்படி வேலை இல்லா திண்டாண்டம் அதிகரித்து கொண்டு இருக்க, இதை எல்லாம் சில சாப்ட்வேர் நிறுவனங்கள் வேறு விதமாக பயன்படுத்த தொடங்கி விட்டன. அது கஷ்டப்பட்டு வேலையை தக்க வைத்திருக்கும் மீதமிருக்கும் ஊழியர்கள் மேல் பாய தொடங்கி இருக்கிறது. இது தான் கொஞ்சம் வேதனை தரும் விஷயம்.
என்ன முழிக்கிறேங்க !!! ஆமாங்க .... அதற்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் எடுத்து இருக்கும் ஆயுதம் தான் Human Resources Policy ("HR Policy") மாற்றம்.
மாற்று வேலைக்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் அவசர அவசரமாக சில சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏற்கனவே தீர்மானம் செய்து பிரகடன படுத்த முடியாத பணியாளர் சாதகமில்லாத கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்களையும் தூசி தட்டி எடுத்து பாலிசி மாற்றம் என்ற பெயரில் தங்களுக்கு மேலும் சாதகமாக்கி செயல் படுத்த தொடங்கி விட்டன. இது ஊழியர்களை மேலும் கவலை அடைய செய்கிறது.
என்ன கொடுமைடா சரவணா ?
4) சம்பளம் இல்லா கட்டாய விடுப்பு (உதாரணமாக 30 Days in a Year)
5) Organization restructuring என்ற பெயரில் De-promotion policy. (Demotion Policy)
பொருளாதாரம் வீழ்வது மாறி, மீள ஆரம்பித்த பின்... HR பாலிசியும் வீழ்வது மாறி மீளுமா?
மீளாது என்பது தான் உண்மை!!!
தொடர்புள்ள இடுகைகள்: அலசல்




.jpg)


0 பின்னூட்டங்கள்: